
ஜோகூர் பாரு, – தொலைபேசி மோசடி கும்பலின் சதிவலையில் சிக்கி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒருவர் 520,000 வெள்ளியை இழந்தார்.
கடந்த மாதம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 46 வயதான அந்த உள்நாட்டு ஆடவர் நேற்று போலீசில் புகார் செய்ததாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் சிபி எம். குமார் கூறினார்.
நாட்டின் வட மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர் என தன்னை அடையாளம் கூறிக்கொண்ட நபர் ஒருவரிடமிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அந்த நிர்வாக இயக்குநர் தனது புகாரில் கூறியுள்ளதாக அவர் சொன்னார்.
bernama

