இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் அர்செனல் வெற்றி தொடர்கிறது!

லண்டன் மே 11-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் 1-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹெமரை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் அர்செனல் கிளப் கோலை 83 ஆவது நிமிடத்தில் Trossard அடித்தார்.

இதுவரை 36 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 79 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

35 ஆட்டங்கள் முடிவில் மென்செஸ்டர் சிட்டி 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அர்செனல் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணத்தை வென்று வரலாறு படைக்கும்.

இதனிடையே மென்செஸ்டர் யுனைடெட் 65 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையும் லிவர்பூல் 59 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles