
சுங்கை பூலோ, மே 11-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் விலாயா மாநில KLIFA ஏற்பாட்டில் நடைபெற்ற விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி இரண்டு கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.
கடந்த சனிக்கிழமை சுங்கை பூலோ மெல்வூட் அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி பங்கேற்றது.

இதில் பெண்கள் பிரிவில் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதேசமயம் ஆண்கள் பிரிவில் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி மாணவன் Kiruben (NO9) Top Scorer மற்றும் Raising Star of Match KLIFA 2026 எனும் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார்.
11 வயதான இவரின் அதிரடி ஆட்டம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

சிகாம்பூட் தமிழ்ப் பள்ளியின் கல்வி மற்றும் விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு நாட்டில் புகழ்பெற்ற Blues Brother Welfare Association Malaysia பக்கப் பலமாக உள்ளது.
அந்த வகையில் DATUK DR M.SHANKAR
YOUTH PRESIDENT MALAYSIA, Blues Brothers Welfare And Association Malaysia அவர்கள் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் வெற்றியை வெகுவாக பாராட்டினார்.
இனி வரும் காலங்களில் விளையாட்டு துறையில் சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி சாதனை படைக்க Ybhg Tuan Abdul Samad – President Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia தலைமையில் பக்கப் பலமாக இருப்போம் என்று டத்தோ டாக்டர் எம் சங்கர் தெரிவித்தார்.
இதனிடையே விலாயா KLIFA தலைவர் டத்தோ வீரமணி தலைமையில் நடைபெற்ற விலாயா மாநில கால்பந்து போட்டி தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

