
அலோர் ஸ்டார், மே 11-
கெடா ஓப்பன் நீச்சல் போட்டியில் இளம் வீரர் லாவ்னேஷ் கமலேஷ்வரன் மொத்தம் 9 தங்கம் வென்று ஆதிக்கம் செலுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
கெடா ஓப்பன் நீச்சல் சாம்பிய போட்டி கடந்த 8, 9ஆம் தேதிகளில் குனூங் கெரியாங் நீச்சல் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
லாவ்னேஷ் கமலேஷ்வரன் 16–18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்தார்.
இந்த பிரிவில் சிறந்த ஆண் நீச்சல் வீரர் விருதை வென்று இரட்டை சாதனை படைத்தார்.
டி’ஸ்பிளாஷ் நீச்சல் பயிற்சி மையத்தைப் பிரதிநிதித்த லாவ்னேஷ், ஸ்பிரிண்ட் உட்பட பல பிரிவுகளில் முழு முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார்.
லாவ்னேஷ் கமலேஷ்வரன் மொத்தம் 9 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று, மிகவும் புகழ்பெற்ற நீச்சல் வீரராக போட்டியை நிறைவு செய்தார்.
இதே போன்று அபிநேயா மோகனதாஸ், வரிஸ்மான் பாஸ்கரன், தான்யா சசீ, லெட்சுமி நாயர் அர்ஜுணன், ஜனனி நாயர் அர்ஜுணன், ஆர்த்திவாரா போங்சகூன் ஆகியோரும் அதிக பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

