புதிய செனட்டராக தியாகராஜா ராஜகோபால் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்!

கோலாலம்பூர் மே 11-
ஜனநாயக செயல் கட்சியில் முன்னணி அரசியல் தலைவராக வலம் வரும் தியாகராஜா ராஜகோபால் இன்று புதிய செனட்டராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இன்று காலையில் மேலவையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் அவர் செனட்டராக உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

காஜாங் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்து சிறப்பான முறையில் சேவையாற்றினார்.

ஜனநாயக செயல் கட்சி இவர் மீது நம்பிக்கை வைத்து செனட்டர் பதவியை வழங்கி உள்ளது.

இதன் மூலம் இவர் தொடர்ந்து மக்களுக்கு இனம் மதம் நிறம் பார்க்காமல் தொடர்ந்து சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles