
அபுதாபி, ஜூன் 03
உலக இந்துக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அபுதாபியில் எழுப்பப்பட்டிருக்கும் BAPS இந்து மந்திர் விழங்குகிறது என்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.
RISE எனும் எழுமின் ஏற்பாட்டில் டாவோஸில் உலக தமிழ் தொழில்முனைவோர் மாநாடு நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டிற்கு டிரா மலேசியா இயக்கத்தின் தலைவர் சரவணன் சின்னப்பன் இவர்களுடன் டாக்டர் சத்திய பிரகாஷ் கலந்து கொள்ள இருக்கிறார்.
இவர்களின் இந்த மாநாட்டின் பயணத்தில் இன்று துபாய் அபுதாபியில் எழுப்பப்பட்டிருக்கும் BAPS இந்து மந்திருக்கு சென்றுள்ளனர்.
இந்த மந்திர் கட்டுமானம் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் கட்டிடத்தின் வேளைப்பாடுகளின் தனித்துவம் தம்மை பிரமிக்கச்செய்திருப்பதாகவும் டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.
அரபு நாடுகளில் எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய இந்து மந்திராக இந்த BAPS இந்து மந்திர் விழங்குகிறது.
கடந்த 2019இல் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்த மந்திருக்காக 27 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
அவ்வாண்டின் டிசம்பரில் கட்டுமானம் தொடங்கப்பட்டு இவ்வாண்டு பிப்ரவரியில் திறப்புவிழா கண்டது. இந்த மந்திர் கட்டுவத்ஃற்காக வடக்கு ராஜஸ்தானில் இருந்து இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் இத்தாலியில் இருந்து பளிங்கு கற்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மந்திர் 108 அடி உயரமும், 262 அடி நீளமும், 180 அடி அகலமும் கொண்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்பிரிக்கா, யுனைடெட் கிங்டம், யுனைடெட் ஸ்டேட்ஸ், இந்தியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கட்டுமானத்திற்காக 690,000 மணிநேரத்திற்கும் மேலாக அர்ப்பணித்த்துள்ளனர்.
கட்டுமானப் பணியின் போது முழுமையான டிஜிட்டல் மாடலிங் மற்றும் நில அதிர்வு உருவகப்படுத்துதல்களுக்கு உட்பட்ட முதல் இந்து கல் மந்திராக இந்த அபுதாபி BAPS இந்து மந்திர் விழங்குகிறது.
மேலும் சமய நல்லிணக்கத்தின் சின்னமாகவும் இம்மந்திர் கருதப்படுகிறது.

