பச்சிளம் குழந்தைக்கு முகத்தில் காயம்- பராமரிப்பாளர் துன்புறுத்தியதாக சந்தேகம்!

கோலாலம்பூர், ஜூன் 4- பராமரிப்பாளரின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக
சந்தேகிக்கப்படும் 17 மாதப் பெண் குழந்தைக்கு முகத்தில் காயம்
ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காஜாங், பண்டார் மக்கோத்தா செராசில்
உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தந்தையான 26 வயது
நபரிடமிருந்து இரவு 7.36 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜாஹிட் ஹசான்
கூறினார்.
அக்குழந்தையை திரும்ப அழைத்து வருவதற்காக அந்த மையத்திற்கு
சென்ற போது மற்ற ஆசிரியர்கள் அல்லது பராமரிப்பாளர்கள்
குழந்தையிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் உணவு ஊட்டும்
போது தலைமுடியை இழுத்ததோடு மூக்கையும் கிள்ளியதாகவும்
அங்கிருந்த பராமரிப்பாளர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக இ-ஹெய்லிங்
வாடகை கார் ஓட்டுநரான அந்த ஆடவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்
என அவர சொன்னார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles