
சென்னை: கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம். வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன். திமுகவின் தேர்தல் வெற்றி கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி.
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பாஜக கொடுத்தது. பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

