
பத்துகாஜா, ஜுன்.5 இங்குள்ள பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர்களுக்கு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் இத்தொகுதி மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருவதாக கூறினார்.
அண்மையில் ஈப்போ போலி டெக்னிக் உங்கு ஓமாரில் உயர்கல்வியை தொடரும் மாணவி க்கு மடிக்கணினி வழங்கி உதவினார். இம்மாணவி பி40 குடும்பத்தை சேர்ந்தவர். ஆகவே, அவருக்கு பத்துகாஜா சேவை மையம் உதவ முன் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துரோனோ தாமான் தாசேக் புத்ராவில் நோருல்வுடா பள்ளிவாசல் முன்புறத்தில் தார் ரோடுகள் போடப்பட்டன. அப்பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கேட்டதற்கிணங்க இவ்வுதவி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதோடு, கம்போங் நல்லா கிராமத்தின் பொதுமண்டபம் பழுதடைந்து விட்டது. அந்த மண்டபத்தினை மறுசீரமைக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் கூரைகள் மற்றும் மண்டபத்தை சாயம் அடித்து புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி, கம்போங் பப்பானில் நான்கு நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு நிதியுதவி வழங்கப்பட்டது. ஜே.பி.கே. கம்பத்து செயற்குழுவின் ஆதரவில் நோயாளிகளை அடையாளம் கண்டு உதவிகள் செய்யப்பட்டது. துரோனோவில் முதியோர் ஒருவருக்கு பழைய சக்கர நாற்காலிக்கு பதிலாக புதிய நாற்காலி வழங்கியதாக சிவகுமார் கூறினார்.

