ஈப்போவில் விளையாட்டு காயங்கள்! அதற்கான சிகிச்சை பயிற்சி பட்டறை

ஈப்போ, ஜுன். 5 தற்போது விளையாட்டுத்துறையில் அதிகமான காயங்கள் அல்லது உடல் உறுப்பு பாதிப்புகள் மிகவும் சகஜமாக ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, மற்ற விளையாட்டை விட கால்பந்து விளையாட்டாளர்கள் அதிக பாதிப்பையும், சவாலையும் எதிரநோக்குவதாக இங்குள்ள பாத்திமா தனியார் மருத்துவமனையின் எலும்பியல் நிபுணத்துவ டாக்டர் ஏ.அமாலுட் ராஜ் கூறினார்.

இங்குள்ள தாசேக் கே.எஸ்.ஆர். விளையாட்டு கிளப்பின் கால்பந்து விளையாட்டாளர்கள் மற்றும் அதகாரிகளுக்கு விளையாடும் பொழுது ஏற்படும் காயங்கள் மற்றும் அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்ற பயிற்சி பட்டறையில் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான விளையாட்டாளர்களுக்கு இம்மாதிரியான விளையாட்டு காயங்கள் மற்றும் அதற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் தெரியாமல் உள்ளனர். அதோடு, மற்றவர்கள் கூறும் விதிமுறைகளை பின்பற்றி மேலும் அந்த காயங்கள் பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது.

குறிப்பாக, ஒரு சில விளையாட்டு காயங் களுக்கு ஐஸ்கட்டியை பயன்படுத்தி ஒயவெடுக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்

இத்தகைய பயிற்சி பட்டறைகள் வாயிலாக விளையாட்டாளர்கள் தங்களின் விளையாட்டு காயங் களுக்கு சுயமாக செயல்பட்டு காயத்தை முற்றுப்பெற செய்ய முடியும் என்று அவர் கருத்துரைத்தார்.

நிறைவுவிழாவில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். கே.எஸ். ஆர் தாசேக் கிளப்பின் நிர்வாகத்தினர் இத்தகைய சிறப்பான ஏற்பாடுகள் வழங்கி உதவிய ஐயன் , ஆறுமுகம் மற்றும் பலருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles