
ஈப்போ மாநகரில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் உலகில் பல நாடுகளிலிருந்து எழுத்தாளர்கள் உட்பட ஆயிரம் பேராளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டை ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றமும், பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகதின் ஆதரவோடு இணைந்து நடத்தவுள்ளனர் என்று ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்தின் செயலாளரும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் கூறினார்.
இம்மாநாடு சிறப்புடன் நடைபெற பேராக் மாநில அரசுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் 25 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளதாக, இங்கு மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் தொடக்க அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இம்மாநாட்டை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் தொடக்கி வைக்கிறார். நிறைவு விழாவை பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் நிறைவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் சிறப்பு பிரமுகராக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பேத்தி தி. எஸ். கே. மயூரியின் இலக்கிய உரையும் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பன்னாட்டு சிறுகதை களஞ்சியம் வெளியீடு காண உள்ளது.
இதில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின. படைப்புகள் , , புத்தக கண்காட்சி, ஆய்வு கட்டுரை் சமர்பித்தல் , தக்கார் விருதுகள் ஆகிய அங்கங்களும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
மாநில அரசு தமிழ்ப் பள்ளி, ஆலயங்கள வளர்ச்சிக்கு மட்டும் அல்ல மாறாக இலக்கிய வளர்ச்சிக்கு சிவநேசன் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறார் என்று சிவநேசனின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட அவரின் சிறப்பு அதிகாரி முத்துச்சாமி உத்திரபாதி அறிமுக விழாவில் கூறினார்.

