
சுங்கை பாக்காப், ஜூன் 16-
பினாங்கு மாநில சுங்கை பாக்காப் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பாஸ் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் போட்டியிடவுள்ளார்.
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத் தேர்தலில் நிபோங் திபால் பாஸ் தலைவர் அபிடின் இஸ்மாயில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்..

