தமது குடும்பத்திற்காக வியர்வை சிந்தி உழைக்கும் தந்தையர்களை போற்றுகிறேன்! மாமன்னர் தம்பதியர் வாழ்த்து செய்தி

கோலாலம்பூர் ஜூன் 16-
மாட்சிமை தங்கிய மாமன்னர் Sultan Ibrahim மற்றும் அரசியார் Raja Zarith Sofiah ஆகியோர் அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ஒரு தந்தை என்ற அடிப்படையில், அவரது பொறுப்பு, முக்கிய பங்கு, குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை தருவதில் அவர்களின் தியாகங்களை புரிந்து கொண்டதாக மாமன்னர் தெரிவித்தார்.

தங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து வாழ்வாதாரத்தை வழங்க பாடுபடும் அனைத்து தந்தையர்களுக்கும், உங்கள் வியர்வை மற்றும் தியாகம் அனைத்தையும் நான் போற்றுகிறேன்.

“ஒரு தந்தையாக, குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைப்பதில் தந்தையின் பொறுப்பு மற்றும் முக்கிய பங்கையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

பெர்னாமா 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles