நவராத்திரி முதல் நாள் உபயம்; 300 பேருக்கு அன்னதானம்

கோலாலம்பூர், அக் 13-
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அக்டோபர் 11ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி முதல் நாள் உபயத்தை டத்தோ டாக்டர் விஸ்வநாத் என்கிற விஸ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தினர்.

இதில் ஆலயத் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா, அவரது மனைவி புவான் ஸ்ரீ டத்தின் மல்லிகா நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். பக்தர்களும் சிறப்புப் பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

சிறப்புப் பூஜையைத் தொடர்ந்து, டத்தோ டாக்டர் விஸ்வநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles