மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.இராஜனை நலம் விசாரித்த பிரதமர் துறை அமைச்சின் அதிகாரிகள்!

செலாயாங், அக் 15-
மக்கள் ஓசை நாளிதழின் மூத்த ஆசிரியரான பி.ஆர்.இராஜன் பூபாலன் அவர்கள், தலையில் இரத்தக் கட்டி ஏற்பட்டதன் காரணமாக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் வேண்டுகொளுக்கு இணங்க செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பிரதமர் துறை அலுவலக சார்பில் சிறப்பு அதிகாரி ஜஸ்டின் ராஜ் மற்றும் ஊடக அதிகாரி உஷா ராணி ஆகியோர் நேற்று நேரில் வருகை தந்தனர்.

மேலும், அவரும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சைக் காலத்தில் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பிரதமர் துறை அமைச்சின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

பி.ஆர். இராஜன் அவர்கள் விரைவில் பூரண குணமடையவும், அவரது சிகிச்சைகள் அனைத்தும் எவ்வித சிரமமுமின்றி சிறப்பாக நடைபெறவும், அவர் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்பவும் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் இந்தச் சவாலான காலகட்டத்தை எதிர்கொள்ள அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மனவலிமையும் தைரியமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles