




கோலாலம்பூர் அக் 15-
நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் நவசக்தி நவ விழா செந்தூல் தண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இவ்வாண்டு 53 ஆவது ஆண்டை முன்னிட்டு நவசக்தி நவ விழா 10-10-2026 ஆம் தேதி முதல் 21-10-2026 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது என்று இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தெரிவித்தார்.
நேற்று 4ஆம் நாள் நவசக்தி நவவிழா உபயத்தை மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர்.இராமநாநன் குடும்பத்தினர், Essvan Surendren (SV Health Care) – கோவிந்தசாமி குடும்பத்தினர் ஏற்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய விழாவில் உபயக்காரர்களுக்கு
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் பரிவட்டம் கட்டி கெளரவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வரும் கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமய பணியை டத்தோ ஆர் .இராமநாதன் வெகுவாக பாராட்டினார்.
இதனிடையே வரும் 19 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் அக்டோபர் 20 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் மற்றும் அக்டோபர் 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் வீதி ஊர்வலமும் நடைபெறுகிறது.
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் தேவிகா துணை தலைவர் ரமணி, செயலாளர் அமரேசன், துணை செயலாளர் முருகராஜ், பொருளாளர் கருணாகரன், செயலவை உறுப்பினர்கள் மீனா, ஹேமாலதா, கண்ணன், ராமு, துளசி குணசேகரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

