பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில்Diwali பேனரை அகற்றுங்கள்! இல்லையேல் போராட்டம் – டத்தோஸ்ரீ சரவணன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 10-
இந்தியர்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி ஆகும்.

மலேசிய இந்தியர்கள் காலங்காலமாக தீபாவளி என்று வாழ்த்து கூறிதான் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இன்று தீபாவளி – டீவாவளியாக (diwali) மாறிவிட்டது.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் எல்லாம் Diwali என்று இடம் பெற்றுள்ளது.

இந்த பேனரை அகற்ற வேண்டும், இல்லையேல் முறையாக தீபாவளி என்று இடம் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு தீபாவளி விருந்து நிகழ்ச்சியின் போது நாதஸ்வரம் மற்றும் தோசை இடம் பெறாமல் பங்காரா நடனம் மற்றும் சப்பாத்தி இடம் பெற்றது.

இப்போது தீபாவளி வார்த்தையே அழிந்து வருகிறார்கள்.

நாம் இப்போது ஒன்று ஒன்றாக இழந்து வருகிறோம்.

ஆகவே இந்த டீவாவளி பேனரை அகற்றி விடுங்கள். இல்லையேல் போராட்டம் வெடிக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles