
பெர்லின் , ஜூன் 17-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
டோர்ட்மண்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணியினர் அல்பேனியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல்பேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இத்தாலி அணியின் வெற்றி கோல்களை அலெக்ஸாண்ட்ரோ பஸ்தோனி, நிகோலா பரேலா ஆகியோர் அடித்தனர்.
மற்றோர்ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இதனிடையே நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து கடும் போராட்டத்திற்கு பின்னர் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா வை தோற்கடித்தது.

