
கோலாலம்பூர் ஜூன் 17-
அண்மையில் நடைபெற்ற நடைபெற்ற தேசிய ம.இ.கா புத்ரி தலைவி தேர்தலில் ஜோகூர் மாநில புத்ரி தலைவி மற்றும் ஜோகூர் மாநில Menteri Besar அலுவலகத்தில் இந்திய பிரிவின் சிறப்பு அதிகாரியாக பணிபுரியும் திருமதி.தீபா சோலைமலை தேசிய ம.இ.கா புத்ரி தலைவியாக வெற்றிப்பெற்றதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தேசிய துணைத்தலைவியாக வெற்றிப்பெற்ற சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமிளா அரசு அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும்காலத்தில் தேசிய ம.இ.கா புத்ரி பதவி தேர்தலில் தோல்வி கண்ட தலைவிகளும் வெற்றிப்பெற்ற தலைவிகளோடு ஒன்றிணைந்து இக்கட்சியின் புத்ரி-க்கு பாடுபட வேண்டும். நாடு தழுவிய அளவி்ல் சுமார் 4000 புத்ரி உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களை தூர நோக்கு சிந்தனையோடு சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் மேலும் நம் கடசிக்கும் சிறப்பாக சேவை செய்ய வேண்டும்.
அதே சமயம் Tan Sri SA.VIGNESWARAN அவர்கள் எடுக்கும் அனைத்து நல்ல திட்டஙகளுக்கும் புத்ரி தலைவிகள் பக்கபலமாக இருக்க வேண்டும் என கூறிக்கொள்கிறேன்.
அடுத்த 2026 வரப்போகும் 16-ஆம் பொதுத்தேர்தலில் இப்பொழுதிலிருந்தே உங்களின் திட்டங்களை சிறப்பாக அமைத்து கட்சியின் பெயரை மேலோங்கச் செய்வீர்.
என்றும் அன்புடன்
Seputeh SS. RAMAMURTHI

