


கோலாலம்பூர் ஜூன் 17-
தலைநகர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் அருள் பாலித்து கொண்டிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் மற்றும் விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், அன்புள்ள கவிமாறன் உட்பட பலரும் இந்த மகா கும்பாபிஷேகத்தில் கலந்து சிறப்பித்தனர்.
கும்ப பூசைக்கு பின்னர் மகா மாரியம்மன் நன்னீராட்டு பெருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

