
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப் 18-
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிலாங்கூர் சுக்மா போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சிலாங்கூர் சுக்மா போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் இடம் பெற்றுள்ளது.
இம்முறை சிலம்பம் போட்டியில் சிலம்பத்திற்கு 14 தங்கப் பதக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று தங்கத்தை வெல்ல விலாயா மாநில சிலம்ப குழு இலக்கு வைத்திருப்பதாக கூட்டரசு பிரதேச சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.டி. உதயகுமார் தெரிவித்தார்.
இதனிடையே கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ அவர்கள் விலாயா மாநில சிலம்ப கழகத்தின் முயற்சிகளுக்கு பெரும் ஆதரவை வழங்கி வருகிறார்.
இந்த வேளையில் அவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.

