


சிரம்பான் ஜூலை 30 –
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் முகுந்தன் போட்டியிடுகிறார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் டத்தோ குணாவுடன் இணைந்து இவர் சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.
சிரம்பான் ஜெயா தொகுதி மக்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் முகுந்தனை வெற்றி பெற செய்யுங்கள் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ கேட்டுக் கொண்டார்.

