
சிரம்பான் ஜூலை 30-
“நான் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஒரு பழமையான ஆலயத்தைக்கூட இடிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்று சிரம்பான் நகரில் நடைபெற்ற இந்திய சமூகத்தினருடன் விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆலய விவகாரம் தொடர்பாக அதற்கென சட்ட விதிமுறைகள் உள்ளன.
எனவே, ஒரு ஆலயத்தை ‘சட்டவிரோதமானது’ என்று குறிப்பிட்டிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அது தொழில்நுட்ப ரீதியிலான ஒரு தவறு. அந்த தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிரதமருக்கு மகத்தான ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

