
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப் 18-
உலக வாணிப மையத்தில் கிம்மா கட்சியின் 46 ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய முன்னணி கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பார்கள்.
மறுநாள் தேசிய முன்னணிக்குள் இருப்பதாக கூறுவார்கள்.
இன்றைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு. இவர்கள் தேசிய முன்னணிக்கு விசுவாசம் இல்லாதவர்கள்.
சம்பந்தப்பட்ட கட்சி தேசிய முன்னணி கூட்டணிக்கு உண்மையாக இல்லை.
சம்பந்தப்பட்ட கட்சி இன்னும் இருக்கிறதா அல்லது செயலிழந்து விட்டதா என்பது தெரியவில்லை.
அந்த கட்சி எந்த கட்சி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என மறைமுகமாக சாடினார்
பல ஆண்டுகளாக ஒரு கூட்டணியிலிருந்து விட்டு அந்த கூட்டணியை விட்டு விலகுவதாக கூறிவிட்டு மற்ற கூட்டணியில் இணைய திட்டம் வகுப்பது மாபெரும் துரோகமாகும் என அவர் கடுமையாக சாடினார்

