இந்திய முஸ்லிம் பிரச்சனைகளுக்கு ஒற்றுமை அரசு அமைச்சர்கள் செவி சாய்பது இல்லை! டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் சாடல்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஏப் 18-
கிம்மா கட்சியை பொறுத்தவரை தேசிய முன்னணி சார்ந்த அமைச்சர்கள் இந்திய முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளை செவி சாய்க்கின்றனர்.

ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற அமைச்சர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சு , கல்வி அமைச்சு , மனிதவள அமைச்சு எங்கள் பிரச்சினைகளை தீவிரமாக செவி சாய்ப்பது இல்லை என்று கிம்மா கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்திய முஸ்லிம் மக்கள் செய்யும் தொழில்களான நகைக்கடை, மளிகை கடை , மற்றும் உணவகங்களுக்கு அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பல ஆண்டுகளாக இருந்தும், தீர்வு இல்லை.

இதனால் கடந்த 3 ஆண்டுகளில் பல கடைகள் மூடப்பட்டுள்ளது.

நிலைமை இப்படியே நீடித்தால் இந்திய முஸ்லீம் சமுதாயம் மீண்டும் எழுவது கடினம், ஆகையால் அரசாங்கம் இந்த பிரச்சினை மீது கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்படவில்லை. அது கவலையாக உள்ளது என்றார்.

கிம்மா கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் தேசிய முன்னணியில் அங்கத்துவம் பெற வேண்டும் என்றார்.

இன்று உலக வாணிப மையத்தில் கிம்மா கட்சியின் 46 ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் தலைமை உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை பிரதமர் மற்றும் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles