மலேசிய இந்திய முஸ்லிம் மக்களின் குரலாக கிம்மா விளங்குகிறது!டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் பெருமிதம்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஏப் 18-
இந்நாட்டில் வாழும் மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக கிம்மா விளங்குகிறது என்று கிம்மா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.

கிம்மா தோற்று விக்கப்பட்டு இப்போது 50 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் நலன் கருதி கிம்மா சேவையாற்றி வருகிறது.

இந்நாட்டில் மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள் உணவகம், டெக்ஸ்டைல், நகைக்கடை உட்பட பல தொழில் துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.

இந்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம் உணவகங்கள் உள்ளன.

இந்த உணவக உரிமையாளர்கள் இப்போது அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் அவதி படுகிறார்கள்.

இதற்கு அரசாங்கம் தீர்வு காண முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் மானியம் கோரி விண்ணப்பம் செய்தால் கிம்மா கட்சிக்கு கிடைப்பதில்லை.

நாங்கள் பூமிபுத்ரா இல்லை என்று காரணம் கூறி தட்டி கழிக்கிறார்கள்.

ஆகவே கிம்மா கட்சிக்கு மானியம் கிடைக்க உதவி புரியும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய முன்னணி கட்சியுடன் நாங்கள் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறோம்.

மேலும் தேசிய முன்னணியில் ஒரு உறுப்பு கட்சியாக கிம்மா இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.

இன்று உலக வாணிப மையத்தில் கிம்மா கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் தலைமை உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles