

ஈப்போ ஜூலை 26-
பேராக் மாநில அரசின் சார்பில் இந்திய மாணவர்களின் கல்வி நிதிக்கு இன்று
35 லட்சத்து 22ஆயிரத்து 922 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.
பேராக் மாநில அரசு மாநிலத்தில் உள்ள இந்திய சமுதாயத்தின் நலம் கருதி பல திட்டங்களை வகுத்து பேருதவி புரிந்து வருகிறது.
கோவில், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் அரச சார்பற்ற இயக்கங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற தேசிய திருமுருகன் மாநாட்டில் இந்திய மாணவர்களின் கல்வி நிதிக்கு
35 லட்சத்து 22ஆயிரத்து 922 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதேசமயம் பேராக் மாநிலத்தில் உள்ள இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

