பேராக்கில் கோவில்களை அகற்ற இடமாற்றம் செய்ய என்னுடைய அனுமதி வேண்டும்! டத்தோ சிவநேசன்

ஈப்போ ஜூலை 26-
பேராக் மாநிலத்தில்
எந்தவொரு கோவிலும் அகற்ற வேண்டும் அல்லது இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் முதலில் என்னுடைய அனுமதி வேண்டும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் தெரிவித்தார்.

பேராக்கில் சில கோவில்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது உண்மைதான்.
இந்த ஆலயங்கள் தனியார் மற்றும் அரசு நிலத்தில் உள்ளது.

கோலகங்சார் அரண்மனையில் இருந்த முனீஸ்வரன் ஆலயத்திற்கு மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

1936 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு இப்போது ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

மேலும் கோவில்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் அது பற்றி முதலில் என் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே என்னுடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு கோவிலும் அகற்ற முடியாது என்று அவர் சொன்னார்.

இன்று ஈப்போ கல்லு மலை முருகன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற தேசிய திருமுருகன் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles