

கிள்ளான் ஜூன் 11-
நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் ஆண்டு கூட்டம் வரும் ஜூன் 14 ஆம் தேதி தோட்ட மாளிகையில் நடைபெறுகிறது.
இம்முறை முக்கிய பதவிகளுக்கு பிரபாகரன் வைத்தியலிங்கம் மற்றும் வி.கே.கே. இராஜசேகரன் அணி போட்டியிடுகிறது.
தலைவர் பதவிக்கு இராஜசேகரனை எதிர்த்து நடப்பு துணை தலைவர் பிரபாகரன் போட்டியிடுகிறார்.
துணை தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் நடப்பு உதவித் தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் பிரபாகரன் அணி சார்பில் நடப்பு செயலாளர் மோகனா சின்னத்தம்பி போட்டியிடுகிறார்கள்.
அதேபோல் உதவித் தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் சித்ரா தேவியும் பிரபாகரன் அணி சார்பில் கவி மாறனும் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் ஐ.ஆர். பிரபாகரன் மற்றும் பிரபாகரன் அணி சார்பில் சண்முக செல்வி போட்டியிடுகிறார்கள்.
மொத்தம் 14 பேர் கவுன்சிலர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் 9 பேரும் பிரபாகரன் அணி சார்பில் 14 பேரும் போட்டியிடுகிறார்கள்.
அந்த வகையில் பிரபாகரன் அணி சார்பில் கவுன்சிலர் பதவிக்கு ஏரா. பெருமாள், வர்மன் கந்தசாமி, ராஜேந்திரன், குமரகுரு, குளோரி, புவனேஸ்வரி, ஜெயசூரன், சந்திரா ராம் பிரகாஷ், பிரபாகரன் கோவிந்தன், ராம்குமார், டத்தோ சந்திரசேகரன், வினோதன், பவால் மற்றும் ஜெயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடைபெற இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ளதால் பிரபாகரன் அணியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
கிள்ளான் வட்டாரத்தில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பிரபாகரனும் மோகனா சின்னத்தம்பியும் வாக்கு திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

