


ஈப்போ ஜூலை 26-
பேராக் மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்களுக்கு மடானி அரசாங்கம் சார்பில் இன்று
ஒரு கோடியே 10 லட்சத்து இரண்டாயிரத்து 546 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.
ஈப்போ கல்லு மலை முருகன் கோவில் வளாகத்தில் இன்று மிகப்பெரிய அளவில் தேசிய திருமுருகன் மாநாடு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக பேராக் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு மிகப்பெரிய மானியம் வழங்கப்பட்டது.
பேராக் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு உதவும் வகையில் மடானி அரசாங்கம் மூலம் ஒரு கோடியே 10 லட்சத்து இரண்டாயிரத்து 546 வெள்ளி பெற்றுத் தரப்பட்டது என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் பலத்த கைதட்டலுக்கு இடையே தெரிவித்தார்.
மேலும் பேராக் மாநில அரசின் சார்பில்
ஒரு கோடியே 58 லட்சத்து 87ஆயிரத்து 651 வெள்ளி வழங்கப்பட்டது.
பேராக் மாநிலத்தில் இந்து கோவில்களுக்கு இவ்வளவு பெரிய மானியம் வழங்கப்படுவதுஇதுவே வரலாறு சாதனை என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

