நான் வெளிநாட்டவர் அல்ல! நாம் அனைவரும் Anak Malaysia-ஙா கோர் மிங் முழக்கம்

சிரம்பான் ஜூலை 27-
நாம் எந்த இனம், மதம் அல்லது பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நம்மை ஒன்றிணைக்கும் ஒரே அடையாளம் நாம் அனைவரும் மலேசியர்கள் என்று அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

எங்கள் நாடு ஒவ்வொரு சமூகத்தினரின் பங்களிப்பாலும் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே, நமது எதிர்காலமும் ஒற்றுமை, சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் அனைவருக்கும் சொந்தமான நாடு என்ற உணர்வின் அடிப்படையில் தொடர்ந்து கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நம்பிக்கையுடனும், அன்புடனும், நமது பல்வகைத் தன்மையே நமது மிகப்பெரிய பலம் என்ற நம்பிக்கையுடனும், ஒன்றிணைந்து மலேசியாவை முன்னேற்றுவோம்.

நம்பிக்கை நிலைத்திருக்கட்டும். (Kekal Harapan.) என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles