நீலாய் சட்டமன்ற தொகுதியில் அருள் குமாரை ஆதரித்து ஹன்னா இயோ தீவிர பிரச்சாரம்!

நீலாய் ஜூலை 28-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமாரை ஆதரித்து நேற்று அமைச்சர் ஹன்னா இயோ பிரச்சாரத்தில் இறங்கினார்.

ஜசெக கட்சியில் நீண்ட காலம் சேவையாற்றி இருக்கும் அருள் குமார் நீலாய் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறார்.

நீலாய் தொகுதி மக்களிடையே நெருக்கமான உறவை வைத்திருக்கும் அருள் குமார் எந்த நேரத்திலும் களத்தில் நிற்பவர்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் நீலாய் சட்டமன்ற தொகுதி மக்கள் திரண்டு வந்து அருள் குமாருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles