

சிரம்பான் ஜூலை 28-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ தினாளன் ராஜகோபால் போட்டியிடுகிறார்.
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் இளம் வேட்பாளர் முகுந்தன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ திளாளன் ராஜகோபாலை ஆதரித்து நேற்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா பிரச்சாரத்தில் களம் இறங்கினார்.
பிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி மற்றும் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

