நெகிரி மாநில ஆட்சிக் குழுவில்இரு இந்தியர்கள்! பக்கத்தான் ஹராப்பான் ஏற்கெனவே நிருபித்து விட்டது!

சிரம்பான் ஜூலை 28-
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் என்பதை பக்கத்தான் ஹராப்பான் ஏற்கனவே நிரூபித்து விட்டது என்று
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

பக்கத்தான் ஹராப்பான் அரசு, இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

கடந்த 2018 முதல் நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தின் கீழ் நெகிரி செம்பிலானில் இரண்டு இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இருந்து வருகின்றன.

நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார் மற்றும் ரெப்பா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வீரப்பன் ஆகியோர் இரண்டு தவணைகள் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றனர்.

இது ஏற்கனவே நம்பிக்கை கூட்டணியால் செயல்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.

உண்மையில் சிலாங்கூர், பினாங்கு உட்பட நம்பிக்கை கூட்டணி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்திய செயற்குழுப் பிரதிநிதிகள் உள்ளனர்.

கல்வி, தொழிற்கல்வி, திவேட், தொழில்முனைவு, மித்ரா முன்னெடுப்புகள், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உண்மையான வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles