


சிரம்பான் ஜூலை 27-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.
நேற்று ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அச்சுதனை ஆதரித்து தேசிய முன்னணி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
பிபிபி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவி தலைவர் டத்தோ இண்டர் ஜிட் சிங், பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

