

சிரம்பான் ஜூலை 28-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் இளம் வேட்பாளர் முகுந்தன் போட்டியிடுகிறார்.
செரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் ஹராப்பான் வேட்பாளர் திரு. முகுந்தன் சுப்பிரமணியத்தை ஆதரித்து காஹாங் சந்தையில் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
மக்களின் அன்பும் உற்சாகமான வரவேற்பும் அந்தக் காலை பரப்புரையை பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்தது போன்ற உணர்வாக மாற்றியது.
முகுந்தன் அவர்கள் புதிய வேட்பாளராக இருக்கலாம்; ஆனால் சமூகப் பணியில் அவர் புதியவர் அல்ல. ஒவ்வொரு மக்களின் பேச்சையும் கவனமாகக் கேட்பதும், அன்புடன் அணுகுவதும், இயல்பாக உரையாடுவதும், மக்களின் மனதையும் தேவைகளையும் அவர் நன்கு அறிந்திருப்பதை வெளிப்படுத்துகிறது.
புன்னகையுடன் வரவேற்ற அனைவருக்கும், தங்களின் ஆலோசனைகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் பகிர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
சிரம்பான் ஜெயாவிற்காக, மக்களுடன் எப்போதும் நெருக்கமாக இருந்து, அர்ப்பணிப்புடன் சேவை செய்யத் தயாராக இருக்கும் முகுந்தனை மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுங்கள் என்று அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

