

ஜெராம் பாடாங், ஜூலை 27-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஜெராம் பாடாங் தொகுதியில் மணிவண்ணன் போட்டியிடுகிறார்.
நேற்று தாமான் ஜெயா பகுதியில் வீடு தோறும் சென்று (walkabout) அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, நலன் விசாரிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக மணிவண்ணன் கூறினார்.
ஒவ்வொரு சந்திப்பும் மக்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, அவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.
இவ்வாறான சந்திப்புகள் சமூகத்திற்கு பயனளிக்கும் நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
நம்பிக்கை நிலைத்திருக்க பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

