பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

கோலாலம்பூர் ஜூன் 11-
நாட்டில் மிகவும் துடிப்புடன் இயங்கி வரும் பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் இன்று பிறந்த நாள் விழா கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதன் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரைக்குமான பிறந்த நாளை கொண்டாடும் திருமதி முனியம்மா, திருமதி செல்வி ஷாமணி, திருமதி மாலதி, திருமதி பிரேமலதா, திருமதி கனேகேஸ்வரி, திருமதி கலைச்செல்வி, திரு தேவேந்திரன், திருமதி கங்கம்மாள், திரு பூபாலன் ( நடப்பு துணை தலைவர், குமாரி செல்வி ஜீவிதா, திரு.டின் , திருமதி மகேஸ்வரி ஆகியோர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா பல சமூக சேவைகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக வசதி குறைந்த ஏழை மக்களுக்கு உணவு கூடைகள், முதியோர்களை கெளரவித்து சிறப்பு செய்தல், உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம் என்று ஸ்டார் மணியம் தெரிவித்தார்.

இந்த விழாவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles