
ஜொகூர் பாரு ஜூன் 24-
ஜொகூர் மாநிலத் தேர்தலில் மஇகா நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தொகுதித் தேர்தல் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி மொத்தம் 56 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜொகூர் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இன்று வேட்பாளர் பெயர் பட்டியலை அறிவித்தார்.
அதன் அடிப்படையில் மஇகா நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கடந்த தவணையில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த ரவீன்குமார் கெமெலே தொகுதியில் போட்டியிடுகிறார்.
மாநில மஇகா தலைவரான அவரின் தொகுதி இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை அவர் தெங்காரோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரைத் தவிர்த்து கஹாங்கில் ருகேந்திரன், பெர்லிங்கில் பன்னீர் செல்வம், புக்கிட் பத்துவில் குமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

