
மியாமி, ஜூன் 25-
ஐந்து முறை உலகக் கிண்ண சாம்பியன் பிரேசில் அணி இன்று காலையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
காயத்தால் அவதிப்பட்டு வந்த கோல்மன்னன் நெய்மார் இன்றைய ஆட்டத்தில் இளம் இறங்கினார்.
மியாமி அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 65,000 ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும் ஒன்றில் டிராவும் கண்ட பிரேசில் 7 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் பிரேசில் அணிக்காக வினிசியஸ் ஜூனியர் (Vinícius Júnior) இரண்டு கோல்களையும் (7 மற்றும் 45+3வது நிமிடங்களில்), மேதியஸ் குன்ஹா (Matheus Cunha) ஒரு கோலையும் (60வது நிமிடம்) அடித்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் உலகக் கோப்பையில் மாற்று வீரராகக் களமிறங்கினார்.
பிரேசில் அணி தனது அடுத்த சுற்றில் ‘குரூப் F’ இல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியை (ஜப்பான்) எதிர்கொள்ளவுள்ளது.

