


கோலாலம்பூர் ஜூன் 17-
இன்று உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் பெருமக்கள் தியாகப் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் கோலாலம்பூர் கம்போங் பண்டான் மதராஸாவில் தியாக பெருநாள் கொண்டாட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்ட பின்னர் அதன் இறைச்சிகள் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மத்ராஸா கம்போங் பண்டான் உஸ்தாத் மெளலவி ஹாபிழ்
முஹம்மது சலீம் மன்பயீ , மதராஸா தலைவர் ஹாஜி முகம்மது இக்பால் மற்றும் முன்னாள் தலைவர்
ஹாஜி அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் இந்த தியாக பெருநாள் கொண்டாட்டம் சிறப்புடன் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

