
ஜி7 உச்சி மாநாட்டின் குழு போட்டோவில் மோடி நடுவில் நின்றுகொண்டிருப்பது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த குழு போட்டோவை கொண்டாட தொடங்கியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
G7 உச்சி மாநாட்டையொட்டி, வெள்ளிக்கிழமை இத்தாலியின் அபுலியா நகரில் பிரதமர் மோடி பல உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இந்த சந்திப்பின் முடிவில் தலைவர்கள் கூட்டாக நின்று எடுத்து கொண்ட புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் வோலோடிமியர் ஜெலென்ஸ்கி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட உலக தலைவர்களுடன் எடுத்து கொண்ட குழு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தில், பிரதமர் மோடி நடுவில் நின்றுகொண்டுள்ளார். இது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை காட்டுவதாக பாஜகவினரும் மோடி ஆதரவாளர்களும் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

