
கிள்ளான், ஜூன் 17 சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து சமூகத்தினரிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்காக செந்தோசா மாநில உறுப்பினர் தூய்மை மற்றும் பசுமை பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.\
சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் அதை வாழ்க்கையின் அன்றாட வழக்கமாக மாற்றவும் சமூகத்திற்கு போதிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது என்று டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
வெள்ளம், வடிகால் போன்ற சில பிரச்சனைகள் குத்தகையாளர்கள் செய்ய வேண்டிய பணி என்று பொதுமக்கள் அடிக்கடி கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது அனைவரும் பகிர்ந்து செய்ய
வேண்டிய பொறுப்பாகும் என அவர் சொன்னார்.
எனவே, வீடுகள் எப்போதும் சுத்தமாகவும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் இருக்கவும், சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை சமூகத்திற்கு ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று பிரசாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் கூறினார்.
Bernama

