
கோலாலம்பூர், ஜூன் 17- உதவித் தொகை மறுசீரமைப்பின் வழி மிச்சப்படுத்தப்படும் தொகையை மக்களுக்கே திருப்பித் தரும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏ.பி மற்றும் சி கிரேடு முட்டையின் சில்லரை விலை 3 காசு குறைக்கப்படுகிறது.
இந்நடவடிக்கையின் வாயிலாக இன்று தொடங்கி ஏ.பி மற்றும் சி கிரேடு முட்டை முறையே 42 காசு, 40 காசு மற்றும் 38 காசாக விற்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முட்டைக்கும் வழங்கப்படும் 10 காசு மானியத்தின் வாயிலாக அரசாங்கம் பத்து கோடி வெள்ளியைச் செலவிடும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு முட்டைக்கு அரசாங்கம் வழங்கிய உதவித் தொகை 92 கோடியே 70 லட்சம் வெள்ளியாக இருந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
Bernama

