



செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் ஜூன் 17-
மலேசிய இந்திய சிறு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் – டத்தின் மீனாட்சி தம்பதியரின் திருநிறைச்செல்வன் அண்ணாமலை தண்ணீர் மலை மற்றும் காசி விஸ்வநாதன் மீனாட்சி தம்பதியரின் திருநிறைச்செல்வி நிவாஷினி மெய்யம்மை ஆகியோரின் இனிய திருமணம் இன்று கோலாலம்பூர் செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி, மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தம்பதியர், டத்தோ ரெனா இராமலிங்கம் பிள்ளை, டத்தோ ரெனா நாகசுந்தரம் தம்பதியர், , குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், மலேசிய இந்திய உலோக பொருள் மறு சுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ தீபா ஆறுமுகம், தொழிலதிபர் டத்தோ ஆணிமுத்து,டத்தோ சரவணன், மக்கள் ஒசை நிர்வாக இயக்குனர் டத்தோ கோபி, பத்திரிகையாளர் செ. வே. முத்தமிழ் மன்னன்,முத்தரசு, புகைப்படக் கலைஞர் பி மலையாண்டி, முருகன் மாமா, பினாங்கு டத்தோ பழனியப்பன்,டத்தோ மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து திருமணத்தில் சிறப்பித்தனர்.
சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன், துணை தலைவர் பிரபாகரன், உதவித் தலைவர் பன்னீர் செல்வம், செயலாளர் மோகனா சின்னத்தம்பி, துணை செயலாளர் டோனி, நிர்வாக குழு உறுப்பினர் ராம்குமார்,சித்ரா, டாக்டர் நவமணி மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு அவர்களின் அரசியல் செயலாளர் செகு ஆனந்த உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

