சுங்கை பாக்காப்பில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்து டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தீவிர பிரச்சாரம்!

மா. பவளச்செல்வன்

சுங்கை பாக்காப், ஜூலை 3-
சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் வேளையில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தீவிர வடபிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜோகாரி அரிப்பினை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதியில் பாஸ் கட்சி வெற்றி பெற்றது.

இந்த இடைத்தேர்தலில் சுங்கை பாக்காப் இந்திய வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதை போல் சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதியிலும் பக்கத்தான் வெற்றி பெற செய்யுங்கள் என்று இந்திய வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles