பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை வெற்றியடையச் செய்யுங்கள்! இந்திய வாக்காளர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வேண்டுகோள்

சுங்கை பாக்காப், ஜூலை 3-
சுங்கப் பாக்காப் இடைத்தேர்தலில் அங்குள்ள 17 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜோஹாரி அரிப்பினை வாக்களிப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொகுதியில் மூன்று நாள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள 18 முக்கிய கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளன.

ம.இ.கா, பி பி பி, ஐபிஎப், மலேசிய மக்கள் சக்தி கட்சி, கிம்மா ஆகிய கட்சிகள் தேசிய முன்னணி ஆதரவு கட்சிகளாக இருந்து வருகின்றன.

அதே வேளையில், கெஅடிலான் இந்தியர்கள், டிஏபி கட்சியைச் சார்ந்த இந்தியர்கள், அமானா தமிழ் பிரிவு ஆகியவை பக்காத்தானுக்கு ஆதரவளித்து வருகின்றன.

இந்தக் கட்சிகள் அனைத்துமே ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் உள்ளன.

மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சிகள் அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலான கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே உள்ளன என்பதை கருத்தில் வைத்து பார்க்கும் போதும் மத்தியில் ஒற்றுமை அரசாங்க ஆட்சி உள்ளது என்பதை வைத்துப் பார்க்கும் போதும் சுங்கை பாக்காப் இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை தேர்வு செய்வதே சமுதாயத்திற்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

சமுதாயத்திற்கான மேம்பாட்டு பிரச்சனைகள் தொடர்பில் பிரதமரை சந்தித்துப் பேசும் போது இணக்கப்போக்குடன் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டால் நல்ல தீர்வுகள் விரைந்து ஏற்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

பினாங்கு மாநில அரசாங்கத்தின் நேரடி பார்வையில் சுங்கை பாக்காப் வரும் என்றால் இந்தியர் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தைகள் மூலம் விரைந்து தீர்வு காணப்படலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles