
கோலாலம்பூர்: ஜூலை 3-
நமது எழுத்தாளர்கள் அதிகமான படைப்புகளை படைக்க வேண்டும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கேட்டுக் கொண்டார்.
நம் நாட்டின் இலக்கிய உலகில் எழுத்தும் படைப்பும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
தொடர்ச்சியான நூல் வெளியீட்டு விழாக்களைக் காண்பது மனதிற்கு இதமளிக்கிறது.
நேற்று பங்சார் எ. அண்ணாமலையின் கவிதை நூல் வெளியீட்டு விழாவைத் தலைமையேற்று வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் சொன்னார்.
கவிதை என்பது ஒரு தனி மொழி. அந்த மொழிக்கு நிறைய சக்தி உண்டு.
என்றோ படித்த வரிகள் இன்றும் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அந்த மொழியும், கவிதையின் நடையுமே.
இதனை அடிப்படையாக கொண்டு அதிகமான படைப்புகளை எழுத்தாளர்கள் படைக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

