
பிறை, ஜூலை 13-
பினாங்கு பிறை எம்.பி.கே.கே மற்றும் பிறை மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி திட்டம் அண்மையில் நடைபெற்றது.
இத்திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர் உபரி வருமானம் பெறுவதற்கு உதவும் நோக்கிலான இந்த திட்டங்களை பிறை எம்.பி.கே.கே தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் ஏற்பாடு செய்தார்.
12 வாரப் பயிற்சியில் பிரசவத்திற்குப் பிந்தைய தாய், சேய் பராமரிப்பு மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்வழி தாய்மார்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வழிவகுக்கும் என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவதற்கு தங்களுக்குத் பெரிதும் துணை புரிந்த மலேசிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கவுன்சிலர் பொன்னுதுரை இதற்கு ஆதரவு நல்கினார்.

