
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் களமிறங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் தற்போது அதிபராக உள்ளார்
ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல், குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் பைடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பெயரை குறிப்பிட்டு பேசும் இடத்தில், ரஷ்ய அதிபர் புதினின் பெயரை குறிப்பிட்டார்.
அதேபோல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயரை குறிப்பிடும் இடத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பெயரை குறிப்பிட்டார்.
அவரது பேச்சுகள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், மாநாட்டில் கூடியிருந்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பைடனுக்கு 81 வயதாவதால், அவரால் தொடர்ந்து செயல்படமுடியவில்லை என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பைடனை மீண்டும் களமிறக்கினால் ட்ரம்ப் எளிதாக வென்றுவிடுவார். அதனால் கமலா ஹாரிசை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது’

